Monday, April 8, 2013

கருவறை!

"நீ 
எனக்காக
வாழாத
தருணங்கள்
உண்டு...!
அது
உன் தாயின்
கருவறையில்
மட்டும்..."

Tuesday, March 6, 2012

காதல் ஒரு...

"காதல்
ஒரு பொருள் -

வடிவமின்றி
வழி நடத்தி
தத்துவமாய்
அர்ததப்படும்...

காதல்
ஒரு விதை -

புதைத்த பின்னும்
முளைத்து
விருட்சமாய்
உருவெடுக்கும்...

காதல்
ஒரு உணர்வு -

பிரவாகமாய்
பிரசவித்து
உலகம் காணாத
உயிராக்கும்...

காதல்
ஒரு கடவுள் -

உணர மட்டுமே
செய்து
உன்னையும்
கடவுளாக்கும்..."

முடிவில் ஜனனம்

"முடிவு -
மொத்தமாய்
கடந்து போகிற
கடைசி
முற்றுப்புள்ளி...

இருப்பினும்,
மரணிக்காமல்
சிறு சிறு
முடிவில்
ஜனிக்கிறது
இந்த கவிதை
மட்டும்..."

Sunday, November 6, 2011

மாயக்கண்ணாடி

"எவ்வளவு பெரிய
மாயக்கண்ணாடியாய்
இந்த வானம்...
உன்னை மட்டுமே
நிலவாய்
பிரதிபலிக்கிறதே!..."

Thursday, March 31, 2011

உச்சகட்ட ஞாபகம்

"உன்
ஞாபகத்தின்
உச்சகட்டம்,
உன்
இன்னொரு
ஞாபகம் மட்டுமே..."

செல்ல நாய்குட்டி

"உன் ஞாபகத்தின்
வீட்டை
பாதுகாக்கும்
செல்ல
நாய்குட்டி நான்..."

ஞாபக பசி

"உன் ஞாபகத்திற்கு
தீராத பசி போல...
எனை
இன்னமும்
தின்று
கொண்டுதானிருக்கிறது..."