Thursday, March 31, 2011

உச்சகட்ட ஞாபகம்

"உன்
ஞாபகத்தின்
உச்சகட்டம்,
உன்
இன்னொரு
ஞாபகம் மட்டுமே..."

செல்ல நாய்குட்டி

"உன் ஞாபகத்தின்
வீட்டை
பாதுகாக்கும்
செல்ல
நாய்குட்டி நான்..."

ஞாபக பசி

"உன் ஞாபகத்திற்கு
தீராத பசி போல...
எனை
இன்னமும்
தின்று
கொண்டுதானிருக்கிறது..."

நிலா சொன்னது

"வாழ்க்கை
ஒரு வட்டமென்று
அனுபவம் சொன்னது...
உன் ஞாபகம்
ஒரு வட்டமென்று
நிலா சொன்னது..."

தந்திர தாய் போல்

"கிள்ளிவிட்டு
தொட்டிலையும்
ஆட்டும்
தந்திர தாய்போல்...
உன் ஞாபகம்
சோகம் தந்து
சுகம் தருகிறது..."

சுடும் நிலா

"உன் வெட்கத்தில்
என் நிழலை
பார்த்து விட்டாய்...
நானோ
நிலா வெளிச்சத்தில்
தகித்துக்கொண்டிருக்கிறேன்..."

பட்டாம்பூச்சி கனம்

"உன் ஞாபகம்
பட்டாம்பூச்சியை போல...
கனமில்லாமல்
என் மனதில்
வந்து உட்காருகிறது..."

ஞாபகங்கள்

"உன் அழகுக்கு
திரவியங்கள்
தேவை...
என் அழகுக்கு
உன்
ஞாபகங்கள் தேவை..."

நீ பேசும்போது

"மற்றவர்
பேசும்போது
காது கொடுப்பவன்,
நீ பேசும்போது
மட்டும் மனதை
கொடுக்கிறேன்..."

Wednesday, March 30, 2011

நீர் தேக்கம்

"உனை தீண்ட இயலாத
மழைத்துளிகள்

ஒன்றுசேர்ந்து
நீர் தேக்கமாய்

காத்துக்கிடக்கிறது
உன் பாதங்களுக்காக..."

Saturday, March 26, 2011

எச்சி மிட்டாய்

"அடம் பிடிக்கிற
சிறிய குழந்தைக்கு
குச்சி மிட்டாய் சமாதானம்...
இந்த
அடம் பிடிக்கிற
பெரிய குழந்தைக்கு
எச்சி மிட்டாய் - உன் இதழ்...
சமாதானம்..."

பொறாமை

"உனக்கென்ன!
வாங்கிக்கொண்டாய்
ஒரு முத்தத்தை
என்று...
என் உதட்டின் மேல்
பொறாமை கொள்கின்றன
என் அங்கங்கள்..."

காதல் அறிவியல்

"உன்
குறும்புப்பார்வையில்
இயங்கும்
என் இதயத்துடிப்பின்
அதிசயம்
இந்த
காதல் அறிவியலில்
மட்டும்..."

Friday, March 25, 2011

மயிலிறகால் கலைந்த கவிதை

"கவிதைபக்கங்களில்
வைத்த மயிலிறகால்,
கலைந்த வார்த்தைகளை
புரட்டிபோ...
தமிழ் மட்டுமல்ல
என் காதலும்
உயிர் பெறும்..."

கவிதையும் காதலும்

"கவிதை எழுதிப்பார்!
காதல் எழுவது புரியும்...
காதலித்துபார்!
என் கவிதை
மொத்தமும் புரியும்..."

காதல் குருடன்

"காதலுக்கு
கண்கள் இல்லை...
உன் கண்களில்
காதல் இல்லை...
நான் கண்ணிருந்தும்
குருடனாய்..."

Sunday, March 13, 2011

நீ என் அருகில் மட்டும்!

"நீ உபயோகித்த
பொருட்கள் மொத்தமும்
காதலாகிக்கசிகிறது
நீ அருகில் இல்லாதபோது...

அவை மொத்தமும்
என் கோபத்தில்
சிதருகிறது,
நீ அதனருகில் மட்டுமே
இருக்கும்போது..."