Tuesday, October 21, 2008

நிழல் நான்

"நீ
என்னுடைய
நிஜம்!
நிழல்
நான் மட்டுமே!...

ச்சீய் போடா!

"முகம் சுளித்து
கொஞ்சலாய்
ச்சீய் போடா! என்றாய்...
உறைந்து போனேன்!

அது மொத்தமாய் வாடா!
என புரிந்த பிறகு
விரைந்து போனேன்!..."

சூரியன், நிலா

"பகல், இரவு
என மாறும்
இந்த சூரியனும், நிலவும்
என்னுள் மாறிக்கொண்டது
உன் சந்திப்பிலிருந்து..."

Thursday, October 16, 2008

புது நிலவு

"ஆயிரம்
முறையேனும்
பார்த்திருப்பேன்...
இருப்பினும்
இந்த நிலவு
புதியதாய் தெரிவது

உன் அருகாமையில்
மட்டும்..."

எனை பற்றும் தீ

"உன்னை
பற்றிய கவிதைகள்
என்னை
பற்றிப்போகிறது..."

கவிதையல்ல

"நான் எழுதியது
கவிதையல்ல!...
எனை எழுத
வைத்ததுதான்
கவிதை..."

அடிமைச்சங்கிலி

"அந்த
அடிமைச்சங்கிலியை
கொலுசு என்று
கவிதை பெயர் மாற்றம்
செய்யாதே!..."

நீ கவிதை

"முடியுமா என்று
தெரியவில்லை!...
உணர முயற்சிக்கிறேன்
நீ கவிதையல்ல என்று..."

விஸ்வரூபம்

"உன் நேரடி
தரிசனத்தை விட
உன் நினைவு
விஸ்வரூபம்..."

கவிதை

"நீ கண்களால்
பேசிப்போனதை...
நான் கைகளால்
எழுதிக்கொண்டிருக்கிறேன்..."

அருகாமை

"நான்
நானாகவே
வாழ்ந்து போவது
உன் அருகாமையில்
மட்டும்..."

மெழுகுவர்த்தி

"நீ கண் சிமிட்டி
ஏற்றும்
மெழுகுவர்த்தி நான்...
உருகித்தான் போகிறேன்..."

காதல் உயிரினம்

"மழைக்காலங்களில்
மட்டுமே
வாழ்ந்து போகிற
காதல் உயிரினம் நான்..."

தொழிற்சாலை

"நீயெனக்கு
கவிதை
உற்பத்தி செய்யும்
தொழிற்சாலை..."

Wednesday, October 15, 2008

தோளின் பெருமை

"உன் முகம் சாய்த்த
என் தோளின்
பெருமை சொல்ல மட்டும்
ஏழு ஜென்மங்கள்
தேவையாகிறது..."

தலைப்பில்லா கவிதை

"நீயெனை
பார்க்காமல்
கடந்திருந்தால்
நான் இதை
எழுதாமல்
இருந்திருப்பேன்..."

நானாகிப்போகிறேன்

"காதலின் அத்தனை
பரிமாணங்களையும்
காட்டியாகிவிட்டது...

கடைசியாக,
நீ முகம் காட்டி
கண் சிமிட்டி போ...

உன் கண்களுக்குள்
தங்கிப்போய்
காண்பதெல்லாம்
நானாகிப்போகிறேன்..."

அவதாரம்

"என்
காதலின்
மனித அவதாரம்
நீ..."

காதல் கடிதம்

"உன் பாதம் பட்ட கடற்க்கரை மணல்...
உன் உடல் நனைத்த மழை நீர்...
உன் மூச்சு கலந்த தென்றல் காற்று...
உன் கூந்தல் பறந்த வானம்...
உன் நேர்மையான சுட்டெரிக்கும் பார்வை...
எல்லாம் தயார்
நம் காதல் கிரகப்பிரவேசத்திற்கு...
உனை அழைக்க
அழைப்பிதழ் மட்டுமே மீதி..."

முயற்சி

"உன்னை
சந்திப்பதற்கு
இந்த இரவுகளை
வேகப்படுத்த
முயற்சிக்கிறேன்..."

நான் தோற்றேன்

"உனை
பிடித்து இழுக்கும்
என் கைகளின் வலு...
எனை
பிடித்து அழைக்கும்
உன் பார்வையின் பளு...

நான் தோற்றேன்!..."

மழை அழகு

"இந்த மழைக்கு
புரியவில்லை...
நீ நனைந்தால் மட்டுமே
அது அழகென்று..."

மிகக்கொஞ்சமாய்

"கொஞ்சமாய்
உனை ஒளிந்து
பார்த்த நான்...
மிகக்கொஞ்சமாய்
திரும்பி போகிறேன்..."

என்ன செய்ய

"விட்டு விடு என விலகும்
உன் விரல்கள்...
பற்றிக்கொள் என பதறும்
உன் விழிகள்...
யார் பேச்சை கேட்பேன்
முதலில்?!..."

Tuesday, October 14, 2008

வாய் அதிகம்

"பகிரங்கமாய் பேசும்
உன் விழிகளுக்கு
வாய் அதிகம்!..."

கவிதைகள் பொய்

"நீ உண்மையென்றால்
கவிதைகள் பொய்!
நீ பொய்யென்றால்
இந்த கவிதையும் பொய்!..."

பாதம்

"உன் பாதம்
ஸ்பரிசித்த
எந்த பூமியும்
வறட்சிக்கு
உட்படுவதில்லை!..."

Thursday, October 9, 2008

உன் பெயர்

"பரவசப்பட்டு
மனசு லேசாகிப்போய்
எழுதிய கவிதை
உன் பெயர் மட்டுமே..."

துருவம் ஒன்று

"நான்கு
துருவங்களையும்
ஒன்றாகி போகிறாய்
நீயெனை
கடக்கும் போது..."

தவம்

"வரம் வேண்டி
இந்த தவம் இல்லை!...
நீ வர வேண்டி
இந்த தவம்!..."

அழகிய மிருகம்

"என்னுள்
ஊடுருவிக்கொண்டிருக்கும்
அந்த அழகிய மிருகம்
உன் ஜாடையில்
இருப்பது போல்
உணர்வு..."

உன் புரிதல்

"நான்
பேசும் முன்
விளங்கிப்போகிற
வார்த்தைகள் மட்டுமே
உன் புரிதலடி!..."

Wednesday, October 8, 2008

கவிதையாக்கி

"உன்னை
கவிதையாக்கி கவிதையாக்கி
முகம் மறந்து போனது
- காதல் பிறந்து போனதால்...

உன்னை
காதலித்து காதலித்து
எழுத மறந்து போனது
- நீ கவிதையாகி போனதால்...

உன்னை மீண்டும்
கவிதையாக்கி கவிதையாக்கி..."

முதல் மழை

"நீயெனக்கு
எப்போதும்
முதல் மழைத்தூறல்
ஸ்பரிசம்..."

காதல் சேமிப்பு

''நான் எறும்பு போல...
கொஞ்சம் கொஞ்சமாய்
சேமிக்கிறேன்
என் காதலை
மழை காலத்திற்காக..."

காதல்ல நாம்

"சொன்னவுடன்
புரிந்து கொள்ள
காதல் ஒன்றும்
எனைப்போல் அல்ல...

என்ன சொன்னாலும்
புரிந்து கொள்ளாமல் இருக்கும்
நீ கூட காதல் அல்ல..."

கொஞ்சும் மொழி

"நீ
கொஞ்சிப்பேசும்
அந்த மொழிக்கு
என்ன பெயர்
வைப்பது?..."

கண்கள்

"ஹிட்லருக்கும்
உன் கண்களுக்கும்
பெரிய வித்தியாசம்
ஒன்றுமில்லை..."

காதலாக

"நீயெனக்கு
காதலியாக
வேண்டாம்!
காதலாக வேண்டும்..."

அழகு

"அழகென்று
சொன்னவுடன்...
உனக்கு
இன்னொரு அழகு
வந்து விடுகிறது..."

Tuesday, October 7, 2008

அருகாமை

"ஒவ்வொரு முறையும்
முதல் முறை
நிகழ்வது போல் உணர்வு...
- உன் அருகாமை..."

Monday, October 6, 2008

நான் பொறுப்பல்ல

"நான் பொறுப்பல்லடி...
இந்த மழை
எனை தீண்டி வளர்த்த
இந்த காதலுக்கு
நான் பொறுப்பல்லடி..."

மழை சுகம்

"காதல்
பரிமாற்றத்தில்,
இந்த மழை
காதலை விட
சுகமாய் போகிறது..."

எழுதுகிறபோது

"காதல்" என்று
எழுதுகிறபோதே...
அதில்
பட்டாம் பூச்சிகள்

மொய்க்கதான்
செய்கிறது..."

புகைப்படம்

"என் கற்பனையில்
உயிர் பெறும்
உன் புகைப்படம் மட்டும்
என்னை நிறைய
காதலிக்கிறது..."

நகம்

"யானை தந்தம்
விலை குறைந்தது!
நீ நகம் கடித்த
பிறகுதான்..."

நிலா தடுமாறி

"நான் கொஞ்சம்
நிலை தடுமாறி...
மன்னிக்கவும்!
நிலா தடுமாறியிருக்கிறேன்..."

Sunday, October 5, 2008

காதலில் மட்டும்

"வானம் பார்த்து நடந்து,
கானம் கேட்டு நினைந்து,
கடற்கரை கால் பதித்த காலங்கள்...

கவிதை சொல்லி, கேட்ட
பரிமாற்றங்கள்...

அதிகமாய் கொஞ்சி,
தொட்டணைத்த தேதிகள்...

நிலம் கொண்டு
நிலவில் கண்ட கனவுகள்...

இருவரும்
இழந்து போகிற
தருணங்களுக்கான
உளறல்கள்...

இவை காதலில் மட்டும்..."

காதல் ஸ்பரிசம்

"நீ என்னை
பரீட்சித்து
பார்ப்பதை விட,
ஸ்பரிசித்து பார்!
-காதல் புரியும்..."

வதை

"என்னை நான்
உன்னுள் விதைத்து,
உன்னை நான்
என்னுள் விதைத்து,
நான் மட்டும்
வதைப்பட்டு கொண்டிருக்கிறேன்..."

Saturday, October 4, 2008

கி.மு. கி.பி.

"நீ
கிடைக்கும் முன்
நீ
கிடைத்த பிறகு
- காதல் மட்டுமே
வரலாறு ஆகிப்போனது..."

Friday, October 3, 2008

பார்த்த ஞாபகம்

"எத்தனை முறை பார்த்தாலும்
உன் முகம்
முதல் முறை
பார்த்த ஞாபகம்...
முதல் முறை பார்த்தபோது
எத்தனையோ முறை
பார்த்த ஞாபகம்..."

நீயாக

"உன்னைப்போல்
உன் செய்கைகளை செய்து
என்னை
நீயாக மாற்றுகிறேன்..."

௨ச்சி முகர்ந்து

"௨ன்னையே
௨ச்சரிக்கும்!
௨ன் முகம் ௨ரசி
௨ச்சி முகர்ந்த
என் ௨தடுகள்...
இனி
௨ண்மையே
௨ச்சரிக்கும்..."

ஒத்திகைகள்

"சந்திக்கும் முன்பு
ஓராயிரம் ஒத்திகைகள்...!
ஒட்டு மொத்தமாய்
௨டைந்து போகிறது
௨ன் முன்னால்..."

Thursday, October 2, 2008

சில மணித்துளிகள்

"நான் சில மணித்துளிகள்
இறந்து போவது...
௨ன் நினைவு
இல்லாத போதுதான்…"

இன்னும் காதலிப்பாய்

"என்னை காதலனாக
மட்டும் பார்க்காதே!
மனிதனாக பார்,
இன்னும் காதலிப்பாய்..."

உன்னிலிருந்துதான்

"பிரம்மன்
கவியெழுத
ஆரம்பித்தது
உன்னிலிருந்துதான்..."