Thursday, December 18, 2008

கரையோர சோழிகள்

“அலைகள்
ஒதுக்குகின்ற
கரையோர சோழிகள் போல...

என் ஒவ்வொரு
பார்வையையும்
நீ ஒதுக்கும் போது
புரிந்து கொள்!...

மீண்டும்
அதே அலைகள்
அதே சோழிகளை
இழுத்துச்செல்லும் என்று!…”

Thursday, December 11, 2008

காதல் என்பது

காதல் என்பது...

உன்
நெஞ்சில் புதைந்து
போகிற என் முகம்...

என் முடிக்கற்றைகளை
கோதுகிற உன் விரல்கள்...

உன் ஆறுதலுக்கு
ஏறுடுகிற என் கண்கள்...

என் தவிப்பில் மட்டுமே
தனிந்து போகிற உன் கோபம்...

உன் உறக்கம் தாங்கும்
என் தோழமைத்தோள்கள்...

என் நிழலையும் நேசிக்கும்
உன் அழகான குணம்...

உன் கண் விழிப்பில் மட்டுமே
காணும் என் விடியல்...

காதல் என்பது...

சுக தியானம்

"ஏதோ சொல்ல மறந்த
வார்த்தைகள் மட்டும்
மிஞ்சிப்போகின்றன என்னுள்...

கொஞ்சம் தியானித்து
மறந்தவைகளை உணர
ஒருமுகப்படுத்தும்
உன் நினைவு மட்டும்
தேவையாகிப்போகிறது...

இந்த சுக தியானத்திற்கு
என் உயிர் கூட
எனை மறந்து போகட்டும்!

அதில் உன் நினைவு மட்டும்
மருந்தாகி போகட்டும்..."

சுகமாய் போகும்

"உன் நினைவற்ற
சில மணித்துளிகள்
என் ஜென்மத்தை
சிறிதாக்கி விடுகிறது...

உபயோகிக்காத
வார்த்தைகளின் பிரயோகம்
என் சொல்லுதலை
சுருக்கி விடுகிறது...

முற்றிலுமாய் எனை மறந்த
என் நெஞ்சம்
உணர்வுப்பிரவாகமாகி விடுகிறது...

காதலிக்காவிட்டால் தான் என்ன?...

எழுதி களைத்துப்போன
என் கைகளுக்காவது
கவிதையாகிப்போ!...

--
எல்லாம் சுகமாய் போகும்..."

உண்மைக்காதல்

"என் முகம் பாராமல்
முணுமுணுக்கும்
உன் உதடுகளுக்கு
நான் வார்த்தைகள் போட்டு
வாழ்ந்தது போதும்!
கடைசியாக பேசிவிடு!
அல்லது மௌனித்து விடு!
உண்மை காதலையாவது
உணர்ந்து போகிறேன்..."

Wednesday, December 3, 2008

நீ என் முதல்

"நீ என் கவிதையில்
ஆக்கிரமிக்கும் முதல் வரி..."

"நீ என் காதலை
நனைத்த முதல் மழை..."

"நீ என் உறக்கத்தை
கலைத்த முதல் கனவு..."

"நீ என் கண்களில்
கண்ட முதல் விடியல்..."

"நீ என் உண்மையாய்
உருகிய முதல் உயிர்..."

"நீ என் பிறப்பின் பயனை
சொன்ன முதல் கரு..."